2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆசிரியை தூசிக்க தூண்டிய ஆசிரியருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மே 30 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்

கையடக்க தொலைபேசியூடாக ஆசிரியை ஒருவரை மாணவர்களை கொண்டு தூசிக்க தூண்டியதாக கூறப்படும் அதே பாடசாலையைச்சேர்ந்த  ஆசிரியரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதவான் நீதிமன்ற  நிதிபதி  ஏ. யூட்சன் வியாழக்கிழமை உத்தரவுவிட்டார்.

கல்முனை பிரதேச பாடசாலை ஒன்றின்; மாணவர்களை தூண்டியே குறித்த ஆசிரியர், அதே பாடசாலையைச்சேர்ந்த  ஆசிரியையை தூசிக்கவைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை கல்முனை பொலிஸ் நிலையத்தில்   புதன் கிழமை   முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து  மாணவர்கள் சிலரிடம் பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர்.

முhணவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே  குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .