2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஒருவருடமாக திறக்கப்படாத வாகரை தபாலகம்

Kanagaraj   / 2014 மே 30 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு, வாகரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தபாலகம் கடந்த ஒரு வருடகாலமாக திறக்கப்படாத நிலையிலுள்ளது.

நவீனமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தபாலகம் திறக்கப்படாமலேயே பாழடைந்து வருவதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதமளவில் வாகரைப் புதிய தபாலத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளபோதும்  திறக்கப்படாமல் பாழடைந்து கிடப்பதாக வாகரையிலுள்ள பொதுமக்களும் அங்கு அலுவல்களை நாடிச் செல்லும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை எதுவித அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் தற்போது வாகரை தபாலகம் ஒரு பழைய கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.
வாகரைத் தபாலகப் பரப்பின் கீழ் சுமார் 20 கிலோமீற்றர் சதுரப்பரப்புள்ள வாகரைக் கிராம மக்களுக்கு ஒரேயொரு தபால் ஊழியரே கடமையாற்றுகின்றார் என்று வாகரைத் தபாலதிபர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .