2025 மே 02, வெள்ளிக்கிழமை

விவசாயத் தொழில்நுட்ப விழிப்பூட்டல் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


விவசாயிகள் எமது விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மத்தியில் நம்பிக்கையுடையவர்களாக இருக்கவேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு எமது திணைக்கள் உத்தியோகதர்களால் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும், என மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த விவசாயத் தொழில் நுட்ப விழிப்பூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் திக்கோடை வயற் கணத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு; தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்...

நான் சென்ற மாதம் தான் இந்த மாவட்டத்திற்கு வந்து பிரதி விவசாயப் பணிப்பாளராகக் கடமையினைப் பொறுப்பேற்றேன். அந்த வகையில் இந்த மாவட்டத்தில் இந்த பதவியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் முதலாவது பொது நிகழ்வு இதுவாகும். 

நான் ஏற்கெனவே இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 10 வருடங்கள் பரீட்சயமானவன்.  அதிலும் இதே திணைக்களத்தில் 4 வருடங்கள் ஏற்கெனவே கடமை புரிந்துள்ளேன். அந்த வகையில் இந்த திக்கோடை வயற்கண்டம் எனக்கு புதிய இடம் அல்ல.
அப்போதைய காலகட்டத்திலும் இதே நிகழ்வுகளை நடாத்தியிருக்கின்றோம் ஆனால், அப்போது தனித் திணைக்களமாக இருந்து கொண்டு நடத்தினோம். ஏனெனில், ஏனைய திணைக்களங்களின் ஒத்துழைப்புக்கள் எமக்கு கிடைப்பதுமில்லை இவ்வாறு பெரிய நிகழ்வு செய்வதுமில்லை.

அப்போதைய காலகட்டங்களில் துறைசார்ந்த எமது உத்தியோகதர்களுக்கு உரிய விழிப்பூட்டல்கள் வளங்கப் பட்டவில்லை என்பது தற்போது தான் புலனாகிறது.  ஏனெனில் இதுபோன்ற நிகழ்வுகள் வெற்றியடைவதற்குக் காரணம் எமது விவசாயத்திணைக்களம் மாத்திரமல்ல. இத்துறை சார்ந்த ஏனைய சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்புக்கள் சீராக்க கிடைப்பதனால்தான்.

அந்த வகையில பிரதேச செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்களம், கிராம சேவை உத்தியோகதர்கள்,  போன்றோர் எம்மோடு இணைந்து சகல விடயங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள். என்பதனை நான் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விவசாயிகள் எமது விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மத்தியில் நம்பிக்கையுடையவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு எமது திணைக்கள உத்தியோகதர்களால் தொழில் நூட்பம் சார்ந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும்,  ஏனெனில் ஒரு ஏக்கர் வேளாண்மை செய்வதற்கு 31500 ரூபாய் செலவாகின்றது, அதிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபம் 51000 ரூபாய் ஆனால் அதே வயல் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலக்கடலை, மற்றும் கௌப்பி போன்ற மாற்றுப் பயிர் செய்வதற்கு 27000 ரூபாய் தான் செலவாகின்றது. ஆனால் அதிலிருந்து கிடைக்கப் பெறும் வருமானம் 105000 ரூபாய் ஆகும். இந்த விடயத்தினை விவசாயிகள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
எதிர் காலத்தில் கால நிலையினையும் கருதில் கொண்டும் விவசாயிகளின் நன்மை கருதி இதுவரை காலமும் 2 போகங்கள் செய்கை பண்ணப்பட்டு வரும் விவசாயத்தினை 3 போகங்கள் மேற்கொள்வது தொடர்பில்  ஆராய்ந்து வருகின்றோம்.
 
எனவே எமது விவசாயப் போதனாசிரியர்கள் கூறும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் தொழில் வழிகாட்டலகளையும், கடைப்பிடித்து மாற்றுப்பயிர் செய்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேற்றமடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

திக்கோடை விவசாயப் போதனாசிரியர் என்.விவேகானந்தராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.குசைன், கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹரீஸ், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் மற்றும் திக்கோடை வயற் கண்டத்தினைச் சேர்ந்த விவசாயிகள் என பலர் பலந்து கொண்டனர்.

நெல் விதைக்கும் வயலில் இவ்வருடம் நெல்லிற்குப் பதிலாக 26 ஏக்கர்களில் மறு பயிர் செய்கையாக  நிலக்கடலை மற்றும் கௌப்பி போன்ற மேட்டு நிலப் பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளன.

இப்பயிர் செய்கை சம்மந்தமாக விவசாயிகளுக்க தொழில்நுட்ப விழிப்பூட்டல் இதன்போது இடம்பெற்றதோடு, கௌப்பியும் அறுவடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .