2025 மே 01, வியாழக்கிழமை

வீட்டுத்திட்டத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்து

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில்,   வீடு வசதியற்ற வறுமையான நூறு குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன.

இலங்கை ஹிறாபவுன்டேசன் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய நிறுவனங்களினால் சவூதி அரேபிய நாட்டு நிதியுதவியுடன் இந்த வீட்டுத்திட்டம் நிர்மானிக்கப்படவுள்ளது.
இந்த வீட்டுத்திட்டத்தினை நிர்மானிப்பதற்கான உடன் படிக்கை காத்தான்குடி ஹிஸபுல்லாஹ் மண்டபத்தில் வைத்து இன்று (31)சனிக்கிழமை செய்யப்பட்டது.

இதில் ஹிறா பவுண்டேனசன் நிறுவனத்தின் தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபிய நாட்டு  இமாம் அஸ்ஸெய்ஹ் ஸலாஹ் பின் ஸாலிஹ் பஊத் உதுமான் மற்றும் ஒப்பந்த காரர்களும் இந்த உடன் படிக்கையில் கையொப்பமிட்டனர்.

நூறு வீடுகளை கொண்ட இந்த வீட்டுத்திட்டத்தில் முதல் கட்டமாக 60 வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன. இதன் ஒவ்வொரு வீடும் 767,500 ரூபாவாகும்.

இந்த வீடுகளுக்கான பயணாளிகளை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவு செய்யவுள்ளது. இந்த வீட்டுத்திட்டத்தினை நிர்மானிப்பதற்கான காணியினை முகம்மட் லாபீர் ஹாஜியார் என்பவர் அன்பளிப்புச் செய்துள்ளதாக பிரதியமைச்சரும் ஹிறா பவுண்டேனசன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 3500 பேருக்கு இலவச குடி நீரை வழங்குவதற்குரிய நிதியுதவியினை வழங்குவதற்கான உடன படிக்கையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது.
 
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .