2025 மே 01, வியாழக்கிழமை

மாவை எம்.பி மயங்கி விழுந்தார்

Kanagaraj   / 2014 மே 31 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



-மாணிக்
கப்போடி சசிகுமார், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்,எஸ். பாக்கியநாதன்,க.ருத்திரன்,எஸ்.ரவீந்திரன் 

மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற  'அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் -ஒரு சமகால பார்வை' எனும் கருத்தரங்கில் உரையாற்றிக்கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மயங்கி விழுந்துவிட்டார்.

அவர், இந்த கருத்தரங்கில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றிகொண்டிருந்த நிலையிலேயே மயங்கி விழுந்தார்.  அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இக்கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேத்திரன் மற்றும் சி.யோகேஸ்பரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Sunday, 01 June 2014 03:25 AM

    இவர்கள்தான் இறுதி மூச்சுவரை இனத்துக்காக குரல் கொடுப்பவர்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .