2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி தீக்கிரை

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்னோடை கிராமத்தில் உள்ள முச்சக்கரவண்டியொன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை 2 மணியளவில் இனம்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

செம்மண்னோடை தக்வாபள்ளி, குறுக்கு வீதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக தொழில் புரியும் ஏ.எஸ்.சலீம் என்பவருக்குச் சொந்தமான முச்சக்கரவண்டியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனால் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதனுள் இருந்த கடவுச்சீட்டு ஒன்றும் தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வண்டியின் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X