2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தின் ஏற்பாட்டில், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஊர்வலமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் இன்று (01) நடத்தப்பட்டது.

இந்த ஊர்வலம் காத்தான்குடி பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதான வீதி வழியாக சென்று மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது.

மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம்.கபீர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது வாக்காளர் இடாப்பில் வாக்காளராக பதிவு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் அந்த பதிவை மேற் கொள்ளும் முறை தொடர்பாக விழிப்பூட்டும் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இலங்கையில் வருடந்தோறும் ஜுன் மாதம் 1ஆம் திகதி வாக்காளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X