2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதிய நிர்வாகிகள் தெரிவு

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்ட பகிரங்க ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்ட பகிரங்க ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 13ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை (31) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிதியத்தின் தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் உறுப்பினர்கள் உட்பட தாய் சங்கத்தின் பிரதிநிதிகளும், முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக சொலமன் சுப்பிரமணியமும், செயலாளராக ஏ.யூ.எம்.காதர், பொருளாளராக கெ.செல்வநாயகம், உப தலைவராக என்.எம்கந்தசாமி, உப செயலாளராக இ.செல்வநாயகம் உட்பட எட்டு பேர் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பகிரங்க ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தினால் அதன் அங்கத்தவர்களின் நலன்புரி மற்றும் அவர்களின் நலன் சார்ந்த விடயங்கள் கவனிக்கப்பட்டு வருவதாக அதன் செயலாளர் ஏ.யு.எம்.காதர் தெரிவித்தார்.

இந்த வகையில் அங்கத்தவர்களுக்கு கடன் வழங்கப்படுவதுடன் இருதய சத்திரசிகிச்சைக்கு பத்தாயிரம் ரூபாவும், சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு பத்தாயிரம் ரூபாவும், வைத்தியசாலையில் 10 நாட்களுக்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு நாளொன்றுக்கு 250 ரூபா வீதமும், மரணக் கொடுப்பனவாக எட்டாயிரம் ரூபாவும், கண்ணில் லென்ஸ் வைப்பதற்கு நாலாயிரம் ரூபாவும், அங்கத்தவரின் பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்கு சென்றால் புலமைப்பரிசில் கொடுப்பனவாக ஐய்யாயிரம் ரூபா வழங்கப்பட்டு வருவதாக செயலாளர் ஏ.யு.எம்.காதர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X