2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நடமாடும் வாகன பவனி

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவுகளுக்கான நடமாடும் வாகனப் பவனியும் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் நேற்று (31) நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவும் வை.எம்.சி.ஏ.நிறுவனமும் இணைந்து கிராமிய மக்களை சிறுவர் துஷ்;பிரயோகங்களில் இருந்து தடுக்கும் வகையில், 'மகிழ்ச்சியான குடும்பம் ஆரோக்கியமான சமூகம்' எனும் தொனிப் பொருளிலான நடமாடும் வாகனப் பவனி விழிப்புணர்வு செயல்திட்டம் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகம் தோறும் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில், மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான வாகனப் பேரணி பிரதேச செயலகப் பிரிவில் முக்கிய வீதிகளுக்கூடாக சென்று ஓட்டமாவடி சிறுவர் பூங்காவை வந்தடைந்து.

அங்கு சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களது நாடகங்களும் மேடையேற்றப்பட்டன.

ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.உம்.றுவைத், வை.எம்.சி.ஏ.நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.அன்பழகன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான ஏ.எம்.றிஸ்வி தாஸிம், பி.எம்.எப். காசிம், ஏ.அழகுராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X