2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. மஹாஜனக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 02 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியினுள் அதிபரும் ஆசிரியர்களும் நுழையமுடியாதவாறு பூட்டுப் போட்டு பெற்றோரும் மாணவர்களும்  திங்கட்கிழமை (02)  காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'தகுதி இல்லாத அதிபரையும் குறிப்பிட்ட ஆசிரியர்களையும் இடமாற்று' என்று கோஷம் எழுப்பியவாறு பெற்றோரும் மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக  நின்றிருந்தனர்.

மேற்படி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அதிபர் தடையாக இருப்பதாகவும் தற்போதைய அதிபரின் நடவடிக்கையால் பாடசாலையின் கல்வி சீரழிந்து செல்வதாகவும் பாடசாலை எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு வலய நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் குருகுலசிங்கம் ஆகியோர் பெற்றோருடன்  கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களை பாடசாலையினுள் செல்லுமாறு கேட்டுக்கொண்ட நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற ஆசிரியர்கள் வரவு இடாப்பில் கையொப்பமிட்டனர்.

பாடசாலையிலுள்ள விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றை உள்ளூர் அரசியல்வாதி ஒருவரைக் கொண்டு திறந்து வைக்க வேண்டும் என்பதில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ஆர்வம் காட்டியதாலேயே குழப்ப நிலைமை  உருவானது என்று அதிபரும் ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (01)  மாலை இரகசியமாக  பெற்றோரை அழைப்பித்து பொய்யான கருத்துக்களைக் கூறி பெற்றோரைத் தூண்டி இன்று பாடசாலைக்குப் பூட்டுப் போட வைத்திருக்கின்றார்கள்.

இதற்குக் கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளும் பின்னால் நிற்கிறார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி.உதயரூபன் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0

  • வதனன் Monday, 02 June 2014 09:42 AM

    பெற்றோர்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்கள். சிலர்தான் இந்த பாடசாலையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.

    Reply : 0       0

    s.nivetha Wednesday, 04 June 2014 01:27 PM

    மகாஜனக்கல்லூரி ஆசிரியர், அதிபர் தகமை கொண்டவர்கள்

    Reply : 0       0

    swiss hirama makkal Thursday, 05 June 2014 03:09 PM

    உண்மையை அறிந்து செயற்படவும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .