2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காய்க்கத் தொடங்கிய பேரீச்சை மரங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 02 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சை  மரங்களில்  காய்க்கத் தொடங்கியுள்ளன.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி மற்றும் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள  பேரீச்சை மரங்களே இவ்வாறு காய்க்கத் தொடங்கியுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால்; காத்தான்குடி பிரதான வீதியை அழகுபடுத்துவதற்காக நடப்பட்ட மேற்படி பேரீச்சை மரங்கள் வருடம் தோறும்  மே, ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் காய்த்து பழமாகின்றன.

காத்தான்குடி பிரதான வீதியில் 50 இற்கும் மேற்பட்ட பேரீச்சை  மரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

  • ஆர். சிவாஜி Monday, 02 June 2014 05:29 AM

    இந்த பேரிச்சம் மரங்கள் ஒவ்வொரு தடவையும் காய்க்கும் போதும் செய்தி போடுவீர்களா. காத்தான்குடியென்ன மட்டக்களப்பின் முழு இடமுமா. முஸ்லிம்கள் மட்டக்களப்பில் மிகவும் வசதிகள் கூடிய குறிப்பிட்ட ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடியில் தான் இருக்கிறார்கள். ஆனால் மாவட்டத்தின் முழுவதையுமே அவர்களின் ஊர்கள்தான் கொண்டிருப்பதாகத்தான் உங்களுடைய மட்டுமல்ல எல்லா ஊடகங்களும் நடந்து கொள்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 70 வீதமான பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள். அவற்றிற்குப் போய் வருவதற்கே ஒரு நாளுக்கு மேல் எடுக்கும். இதனையெல்லாம் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X