2025 மே 02, வெள்ளிக்கிழமை

உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எம்.எம்.அனாம்


உலக சுற்றாடல் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் சுற்றாடல் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதி நாடகம், மர நடுகை என்பன  நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனமான யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், மண்முனைப்பற்று பிரதேச சபை இணைந்து முன்னெடுத்த  வேலைத்திட்டத்தில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லை வீதி துப்பரவு செய்யப்பட்டது.  ஆரையம்பதி பொதுச் சந்தைக்கு முன்பாக சுற்றாடல் பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக மரம் நடப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி ஜே.அருட்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், அதிகாரிகள் சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், பொதுச்சுகாதார அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனமான யுனெப்ஸ் நிறுவனத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அதேபோன்று மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் சுற்றாடல் தினத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையின் செயலாளர் யாகேஸ்வரி வசந்தமுக்ரன் தலைமையில் நடைபெற்ற இந்த  ஊர்வலத்தில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜே.சுகுனன், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம், சனசமூக உத்தியோகத்தர் சுரேஸ் ரொபட் பிரபாலினி, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிருஸ்ணகுமார் உட்பட தாதியர்கள் மற்றும் மாணவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 'சூழலை பாதுகாப்போம் அது எம்மை பாதுகாக்கும்', 'ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான சூழல்', 'பூமியை பாதுகப்போம் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்', 'நீரின் தூய்மையை பேணுவோம் காடழிப்பை தவிர்ப்போம்', 'மரங்களை நடுவோம்' என்பன போன்ற வாசங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

மேலும், வாகரை பிரதேச செயலகமும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் பாதுகாப்பு  மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரம் பேணல் திணைக்களமும் இணைந்து நடத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வு வாகரையிலும் நடைபெற்றது.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகரை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இதன்போது, 'வளர் தளிர்; எனும்  இதழும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன்,  கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .