2025 மே 01, வியாழக்கிழமை

ஏறாவூரில் சுமுக நிலையைத் தொடர்ந்து பேண அவசர ஆலோசனைக் கூட்டம்

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூரில் தற்போதுள்ள சுமுக நிலைமையை தொடர்ந்து பேண வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தி அவசர ஆலோசனைக் கூட்டமொன்று திங்கட்கிழமை(16) மாலை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.எஸ்.துசித்தகுமார பண்டார தென்னக்கோன், பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம, ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள், கிராமசேவையாளர்கள், மதத் தலைவர்கள், சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊர்ப்பிரமுகர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வையும் இன ஐக்கியத்தையும் சீர்குலைப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கக் கூடாது என்பதை இதன்போது அனைவரும்  வலியுறுத்தினர்.

'பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நானும் பொலிஸ் பொறுப்பதிகாரியும் மற்றும் இங்குள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்' என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.எஸ்.துசித்தகுமார பண்டார தென்னக்கோன் இதன்பொது தெரிவித்தார்.

இதனிடையே ஏறாவூரிலுள்ள பௌத்த விகாரைக்கு வழமையை விட கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.எஸ்.துசித்தகுமார பண்டார தென்னக்கோன், பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம, ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்டோரும் சமயத் தலைவர்களும் உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .