2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பாலமுனை பிரதேசத்தில் ம.வி.மு. தலைமை அலுவலகம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரதேசத்தில் முதல் தடவையாக எதிர்வரும் புதன்கிழமை (25)   திறந்துவைக்கப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா இந்த  அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றவூப் தெரிவித்தார்.

இந்த அலுவலக திறப்பு விழாவில்; மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் உட்பட முக்கியஸ்தர்கள்  கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி அலுவலகம் திறந்து வைக்கப்படுவது தொடர்பான அழைப்பு துண்டுப்பிரசுரம் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு சனிக்கிழமை (21)  விநியோகிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .