2025 மே 02, வெள்ளிக்கிழமை

புதிய காத்தான்குடியில் மின்மாற்றியை தள்ளி அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 23 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில், புதிய காத்தான்குடி பதுறியா சந்தியில் கடந்த 10 வருடங்களாக இருந்துவந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின்மாற்றியை  10 மீற்றர் தூரத்தில் தள்ளி அமைக்கும் வேலைகள்  திங்கட்கிழமை (23) ஆரம்பிக்கப்பட்டன.

இந்த  மின்மாற்றி அமைந்த இடத்திலிருந்து  நகர்த்தி வைப்பதற்கு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.அலிசப்ரி முயற்சி எடுத்தார்.
இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு அலுவலக பொறியியலாளர் எம்.ஐ.மாஹிரின் மேற்பார்வையுடன் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், இதற்காக  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்; 500,000  ரூபா நிதியுதவி அளித்தார்.  இலங்கை மின்சார சபையின் 04 மில்லியன் ரூபா செலவில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக எம்.ஐ.மாஹிர் தெரிவித்தார்.

பள்ளிவாசல், பாடசாலை, பொதுச்சந்தை அமைந்துள்ளமை உட்பட  சனநெரிசலான இப்பகுதியில் இந்த மின்மாற்றி அமைந்திருந்ததால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .