2025 மே 01, வியாழக்கிழமை

'இன முறுகலை ஆரம்பத்திலே இல்லாமல் செய்யவேண்டும்'

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'18ஆவது திருத்தத்தின் விளைவே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையாகும்' என மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார்.

'இனமுறுகல் நிலையை தோற்றுவிக்கும் காரணிகளை ஆராய்ந்து அவைகளை ஆரம்பித்திலேயே இல்லாமல் செய்து விடவேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அஸ்ஸஹீட் அகமட்லெவ்வை மண்டபத்தில் திங்கட்கிழமை(23) மாலை நடைபெற்ற சமூக நல்லிணக்க கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'17வது திருத்தம் இருந்திருந்தால் சுயாதீன விசாரணைக்குழுக்குழுக்கள் இருந்திருக்கும். 18வது திருத்தத்தின் மூலம் அது இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.

இனமுறுகல் நிலையை தோற்றுவிக்கும் காரணிகளை ஆராய்ந்து அவைகளை ஆரம்பித்திலேயே இல்லாமல் செய்து விடவேண்டும்.

முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இந்த நாட்டிலுள்ள தமிழ் பிரமுகர்கள் பலரும் கண்டித்தனர். அதே போன்று வடமாகாணத்திலும் கண்டனங்கள் இடம்பெற்றன.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கண்டனப் பேரணிகளில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்திலும் பள்ளிவாயல் மீதும் தாக்குதல் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம்களிடையே இறுக்கமான உறவும் ஒரு இணைப்புமுள்ளது. இந்த உறவை குழப்புவதற்கு இந்த இரண்டு சமூகங்களின் உறவை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முனையலாம் அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது.

சமய சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் நமக்குள் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இந்த மாவட்டத்தில் இறுக்கமான ஒற்றுமையை கட்டிக்காக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .