2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பழமையான பள்ளிவாயில்கள் உடைக்கப்பட்டுவிட்டன: ஹிஸ்புல்லாஹ்

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாணத்திலுள்ள மிகவும் பழமையான பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுவிட்டதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள மிகவும் பழமைவாய்ந்த ஜாமியுழ் மஸ்ஜித் ஜும் ஆ பள்ளிவாயலின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்  திங்கட்கிழமை(23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கிழக்கு மாகாணத்தில் 300 மற்றும் 400 வருடங்கள் பழமைவாய்ந்த பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுவிட்டன. இதன் மூலம் பழைமையான வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த தொன்மைகள் அழிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் காங்கேயனோடை பிரதேசத்தில் இந்த பள்ளிவாயலும் மிகவும் பழமைவாய்ந்த பள்ளிவாயலாகும். இந்த பள்ளிவாயலின் பழைய கட்டிடம் உடைக்கப்பட்டு புதிய பள்ளிவாயல் கட்டிடத்தை நிர்மாணிக்கவுள்ளோம்.

அரேபியாவிலுள்ள முக்கியஸ்த்தர் ஒருவர் நிதியுதவியினை வழங்கியுள்ளார்.

இந்த பள்ளிவாயல் கட்டிடத்தை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நிறைவுசெய்ய வேண்டும்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஆற்றங்கரை பள்ளிவாயல் மிகவும் பழமையான தொண்மையுள்ள ஒரு பள்ளிவாயலாகும். அந்த பள்ளிவாயலின் பழைய கட்டிடத்தை அவ்வாறே வைத்துக் கொண்டு நாங்கள் புதிய பள்ளிவாயல் கட்டிடத்தை நிர்மாணிக்கவுள்ளோம்' எனவும் பிரதியைமச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .