2025 ஜூலை 30, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தில், தோப்பூர் அல்லைநகர் 7 ஐச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான  யூ. பதுறுஸ்ஸமான் (வயது 56) என்பவர் பலியாகியதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து தோப்பூரை நோக்கித் சென்று கொண்டிருந்த போது இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகில் இருந்த தென்னை மரத்தில் பலமாக மோதியுள்ளது.

வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர், நீரிழிவு நோய் காரணமாக அடிக்கடி தலைச்சுற்றி மயங்கி விழுபவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையின் உடல் நலத்தைப் பார்வையிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போதே வாகரையில் வைத்து மரத்துடன் மோதுண்டு இவர் மரணித்துள்ளார்.
தற்போது அவரது உடல் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாகரை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .