2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாதர் சங்கங்களுக்கு நிதி வழங்கி வைப்பு

Super User   / 2014 ஜூன் 24 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு தலா 1 லட்சம் ரூபா வீதம் வழங்கிவைக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (24) இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்வாதார மேம்படுத்தலுக்காக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட 46 மாதர் கிராம அபிருத்திச் சங்கங்களுக்கு ஒரு சங்கத்திற்கு தலா 1 லட்சம் ரூபா வீதம் ரூ 46 லட்சம் நிதி வழங்கப்பட்டதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மீழ்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன்.இரவீந்திரன், ஞா.ருத்திரமலர், மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.எஸ்.காமினி மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .