2025 மே 01, வியாழக்கிழமை

கதிர்காமத்திற்கு விசேட பேருந்துச் சேவை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 26 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

எதிர்வரும் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள  கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு ஜூலை மாதம் 13ஆம் திகதிவரை கதிர்காமத்திற்கான இ.போ.சபையின்  விசேட பேருந்துச் சேவை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பேருந்துச்; சாலைகளிலிருந்தும் நடத்தப்படுமென  இ.போ.சபையின் கிழக்கு பிராந்திய  செயலாற்று முகாமையாளர் செ.கனகசுந்தரம் தெரிவித்தார்.

பேருந்து ஒன்றில் சுமார் 60 பயணிகள் செல்லமுடியும். இந்நிலையில்,  கதிர்காமம் செல்லும் பயணிகள் சாலை முகாமையாளருடன் தொடர்புகொண்டு 5 நாட்களுக்கு முன்னதாக  ஆசனப் பதிவை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கான ஒருவழிக் கட்டணமாக மட்டக்களப்பிலிருந்து கதிர்காமம் வரை  440 ரூபாவும்  கல்முனையிலிருந்து கதிர்காமம் வரை 350 ரூபாவும்  திருகோணமலையிலிருந்து கதிர்காமம் வரை  680 ரூபாவும் அறவிடப்படுமெனவும் அவர் கூறினார். 

எந்த நேரத்திலும் கதிர்காமத்திற்கான பேருந்துச் சேவை இடம்பெறுமெனவும் அவர் கூறினார்.

இது தவிர, கதிர்காமத்திற்கு  வழக்கமான பேருந்துச் சேவைகளும் இடம்பெறுமெனவும் அவர் கூறினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .