2025 மே 02, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி சிரமதானம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சுகாதார அமைச்சினால் கடந்த திங்கட்கிழமை (30) முதல் ஒரு வார காலம் டெங்கு ஒழிப்பு வாரமாக நாடெங்கிலும் பிரகடனப்படுத்தியதையொட்டி நாட்டிலுள்ள உள்ள இலங்கை வங்கியின் 618 கிளைகளிலும் இன்று (05) டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெறுகின்றது.

உயர் தரக் கிளை முகாமையாளர் எம். ஐ. நௌபல் தலைமையில் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் வித்தியாலயத்தின் வளாகம் இலங்கை வங்கியின் நகரக் கிளை, கல்லடிக் கிளை, பிரதேச அலுவலகம் மற்றும் உயர் தரக் கிளை ஊழியர்களால் துப்புரவு செய்யப்பட்டது.

இதில் உதவி முகாமையாளர் கே. சாமித்தம்பி, மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகாகளின் மேற்பார்வையாளர் பி. தேவராஜா, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆர். நந்தகுமார், பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வி. ரமேஸ்குமாh கலந்து கொண்டு வளிப்படுத்தினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X