2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில் தீ

Suganthini Ratnam   / 2014 ஜூலை 06 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், க.ருத்திரன்
, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) காலை பரவிய  தீயால், இரண்டு மாடிக் கட்டடத்தொகுதி மற்றும் உடைமைகள் முற்றாக எரிவடைந்துள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்தால் கட்டடத்தின் கூரை முற்றாக எரிந்து விழுந்துள்ளதுடன்,  கட்டடத்தின் சுவர்கள் வெடித்து விழும் நிலையிலுள்ளன. மேலும், மாணவர்களின்  உடைமைகள் மற்றும் தளபாடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

மேல்மாடியில் ஏற்பட்ட மின்னொழுக்கு இத்தீ விபத்திற்கு காரணமாக  இருக்கலாமெனவும் பொலிஸார் கூறினர்.

இத்தீ பரவிய வேளையில் குறித்த இல்லத்தில் பலர் தங்கியிருந்தபோதிலும், எவரும் பாதிப்பின்;றி உயிர்தப்பியுள்ளனர்

இம்மகளிர் இல்லத்தில் தற்போது 33 பேர் தங்கியிருந்து கற்றுவருகின்றனர்.

இத்தீ விபத்து இடம்பெற்ற இடத்திற்கு செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கி.துரைராஜசிங்கம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பில் ஏறாவூர்ப் பொலிஸார்   விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .