2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போரதீவுப்பற்றில் குடிநீர் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 09 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபை பிரிவில் உட்பட்ட தும்பங்கேணி, இளைஞர் விவசாயத்திட்டம், சுரவணையடியூற்று, களுமுந்தன்வெளி, பிலாலிவேம்பு, காந்திபுரம்,  விவேகானந்தபுரம், வீரங்சேனை, மாவேற்குடா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமையிலிருந்து விநியோகிக்கப்படுகின்றது.

மேற்படி கிராமங்களில் வறட்சி நிலவுவதால் தங்களது அன்றாடத் தேவைக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.  இந்த நிலையில், சுமார் 48,000 லீற்றர் குடிநீர் தினமும் விநியோகிக்கப்படுகின்றது.

மேலும், பல பாடசாலைகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இயன்றவரை பூர்த்திசெய்வதற்கான வேலைத்திட்டங்களை பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. வறட்சி நீடிக்குமாயின் மேலதிக வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சி.குபேரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X