2025 மே 02, வெள்ளிக்கிழமை

போஷாக்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


தேசிய போஷாக்கு விழிப்புணர்வு மாதத்தினை அனுஷ்டிக்கும் முகமாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வியாழக்கிழமை (10) போஷாக்கு விழிப்புணர்வு வீதி ஊர்வலம் ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்த இந்த விழிப்புணர்வூட்டல் ஊர்வலத்தில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம், சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல சுகாதார மருத்துவ மாதுக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்;.

“இரும்புச் சத்து மூலமான போஷாக்கு மனித வாழ்வுக்கு இன்றியமையாதது” எனும் இந்த ஆண்டின் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டதாக சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல் தெரிவித்தார்.

இரும்புச் சத்தித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் போஷாக்கு விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஒலிபெருக்கியினூடே மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களினூடாக போஷாக்கான உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இயற்கையையும் அதன் சூழலையும் பாதுகாக்க வேண்டியது பற்றியும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஊர்வலத்தின் இறுதியில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் உரையாற்றினார்.

“கருவில் தொடங்கி மரணிக்கும் வரை ஒரு மனிதரின் ஆயுட் காலத்தில் இரும்புச் சத்து இன்றியமையாததாகி விடுகின்றது.

உயிர் வாழ்வதற்கு இரும்புச் சத்து முக்கியம். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு இரும்புச் சத்தை விட முக்கியமானது வேறொன்றுமில்லை” என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X