2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சாதனையாளர் பாராட்டு விழா

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா  புதன்கிழமை  (09) களுமுந்தன்வெளி விநாயகர் கலையரங்கில் நடைபெற்றது.

 களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் தலைவர் மு.சவுந்தரராசன்  தலைமையில்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் கடந்த 2013 ஆம் ஆண்டு மட்டகளப்பு களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பொதுத் தரத்தில் சித்தியடைந்து உயர்தரத்திற்குத் தெரிவாகிய 10 மாணவர்களுக்கும், பாசாலை மட்டத்தில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய 3 மாணவர்களுக்கும். பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

 மேலும் களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்திலிருந்து பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் ஆகியவற்றில் இவ்வருடம் (2014) பங்கு பற்றி வெற்றியீட்டிய 30 வீர வீராங்கணைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதன்போது களுமுந்தன்வெளி கிராம அபிவிருத்திக்காக உழைத்து வரும் தெரிவு செய்யப்பட்ட 5 பெரியோர்களுக்கும் வாழ்த்துப்பா வழங்கி, பொன்னாடை போர்திக் களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தினால் கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X