2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மக்களின் வாழ்தாரத்தை மேம்படுத்த மீன் குஞ்சுகள்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மியான்கல் குளத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டதாக மாவட்ட நன்நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்க உத்தியோகத்தர் ஜேக்கப் நெல்சன் (District Fresh Water Aqua Culture Extension Officer) வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே. தனபாலசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திலாப்பியா மற்றும் காப்ராடியா ஆகிய இனங்களைச் சேர்ந்த மீன்குஞ்சுகளே குளத்தில் விடப்பட்டன. இந்தவகை இன மீன்கள் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருட காலப்பகுதிக்குள் 10 கிலோகிராம் வரையும் வளரக் கூடியவை என ஜேக்கப் நெல்சன் கூறினார்.
இந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டதன் மூலம் மியான்கல்குள மீனவர் சங்கத்திலுள்ள 35 மீனவக் குடும்பங்கள் நேரடியாகவும் மேலும் 50 குடும்பங்கள் மறைமுகமாகவும் தமது வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை ஈட்டிக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

சூழலுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் மீன்களை உற்பத்தி செய்வதற்கும் சிறந்த வருமானத்தை ஈட்டி சேமிப்பின் மூலம் வளமான வாழ்வை அனுபவிப்பதற்கும் இந்த மீனவர்களுக்கு முன்னதாகவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நன்னீர் நிலைகள் பலவற்றில் இதுவரை 14 இலட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X