2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விற்பனை நிலையம் திறந்து வைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
,எம்.அனாம்

சுற்றுலாத்துறைக்குப் பிரசித்தமான மட்டக்களப்பு- பாசிக்குடாவில் கிழக்கு மாகாண கிராமிய உற்பத்தித் திணைக்களத்தின் விற்பனை நிலையம் இன்று சனிக்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு கோடி ரூபாய் (9.5 Million) செலவில் நிருமாணிக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையத்தை கிழக்கு மாகாண  விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட்,  திறந்து வைத்தார். அமைச்சின் செயலாளர் கே. பத்மநாதன், கணக்காளர் ஆர். ரகுநாதன், கிழக்கு மாகாண கிராமிய உற்பத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் லக்ஸ்மேந்திரா தயமயந்த்குமார தென்னக்கோன், ஆகியோரும் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிலையத்தைத் திறந்து வைத்தபின் உரையாற்றிய மாகாண அமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண உற்பத்திகளை உலக நாடுகளில் பிரபல்யப் படுத்துவதற்கு இந்த விற்பனை நிலையம் உதவும் என்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X