2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 12 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூரிலுள்ள 500 கைம்பெண்களுக்கு உலருணவுப் பொதிகளும் மேலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 6 பேருக்கு தையல் இயந்திரங்களும் இன்று சனிக்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டன.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதி குல்லிய்யத்து தாறில் உலூம் அறபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண  விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஊர்ப் பிரமுகர்கள், நகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலருணவுப் பொதிகளையும் தையல் இயந்திரங்களையும் வழங்கி  வைத்தபின் உரையாற்றிய மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்,

புனித றமழான் நோன்பு காலத்திற்கான இந்த நன்கொடைகள் லண்டனைச் சேர்ந்த கலாநிதி முஹம்மத் ஹரீஸ் ஸைனுலாப்தீன் என்பவரினதும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஷெய்க் அப்துல்லாஹ் ஷெய்த் அல் மலெய்ஹி என்பவர்களுடையதாகும் என்றார்.

இந்நிகழ்வில் இந்திய - இலங்கை முதலீட்டாளர்களான கே. சுரேந்திரா, ராஜசேகர் ரெட்டி, பாயிஸ் அலவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X