2025 மே 03, சனிக்கிழமை

களுவாஞ்சிக்குடி கடற்கரையில் கழிவுகள் கொட்டுவதால் மக்கள் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 17 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்  


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் களுவாஞ்சிக்குடி கடற்கரை பகுதியில்  கொட்டுவதால், தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக  சூரையடி மற்றும் சமுத்திரபுரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

இக்குப்பை மேட்டிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் தங்களை மிகவும்  பாதிப்பதாகவும் இந்த மக்கள் கூறினர்.

இது தொடர்பில்  மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபை செயலாளர் யாகேஸ்வரி வசந்தகுமாரனிடம் கேட்டபோது, 

'மேற்படி பிரதேச சபைக்குட்பட்ட 45 கிராம அலுவலகர்; பிரிவுகளிலிருந்து  சேகரிக்கப்படுகின்ற கழிவுகள் களுவாஞ்சிக்குடி கடற்கரை பகுதியில் கொட்டப்படுவதால், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாளாந்தம் தமக்கு புகார் கிடைப்பதாகக் கூறினார். 

களுவாஞ்சிக்குடி கடற்கரை பிரதேசத்தில் 02 ஏக்கரை கழிவுகள் சேகரிப்பதற்காக பிரதேச செயலகம்  ஒதுக்கித் தந்துள்ளது. இந்நிலையிலேயே இங்கு கழிவுகளை கொட்டுவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், இங்கு முறையாக கழிவுகள் பேணப்படவில்லை. இவ்விடயத்தை தற்போது 'யுனொப்ஸ்' நிறுவனம் பொறுப்பேற்று  திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தை அமுல்படுத்தவுள்ளது.  இது விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இதன் பின்னர் இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், முதல் தடவையாக  'யுனொப்ஸ்' அமைப்பின் மூலம்  மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையுடன் இணைந்து  திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தை  ஆரம்பிக்கவுள்ளதாக 'யுனொப்ஸ்' அமைப்பின் திண்மக்கழிவு அகற்றல் செயற்றிட்ட முகாமைத்துவ தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் ஏ.எம்.ஆஸிக் கூறினார்.

வீடு, வீடாகச் சென்று  கழிவு அகற்றல் பற்றி விழிப்புணர்வை ஊட்டி  உக்கக்கூடியவை, உக்கமுடியாதவை,  பிளாஸ்ரிக்; வகைகளென கழிவுகளை தரம் பிரித்து வைப்பதற்கான பைகளையும்  வழங்கவுள்ளதாகவும் அவர்  கூறினார்

களுவாஞ்சிக்குடி கடற்கரையிலுள்ள கழிவுகளைச் சுற்றி வேலிகள் இடவுள்ளதுடன், அவ்விடத்தில் கூட்டெரு தயாரிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 
 
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X