2025 மே 03, சனிக்கிழமை

பாடசாலைகள் கட்டப்படுகின்றன, கல்வியில் கரிசனை இல்லை: கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்

Kanagaraj   / 2014 ஜூலை 19 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கிழக்கு மாகாணத்தில் ஒரு மாத்தில் மாத்திரம், சுமார் 30 பாடசாலைகளில் புதிய பாடசாலைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நடுவதும், மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைப்பதுமாக உள்ளோம். இவ்வாறு பாடசாலைகள்தான் கட்டுகின்றோம் ஆனால் கல்வியில் கரிசனை காட்டுவதாக இல்லை என கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்க நேற்று (18) தெரிவித்தார்.

மட்/மகிழூர் சக்தி வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள புதிய இரண்டு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் ஒரு மாத்தில் மாத்திரம், சுமார் 30 பாடசாலைகளில் புதிய பாடசாலைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நடுவதும், மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைப்பதுமாக உள்ளோம். இவ்வாறு பாடசாலைகள்தான் கட்டுகின்றோம் ஆனால் கல்வியில் கரிசனை காட்டவில்லை.

பாடசாலைகளில் வைத்தே மாணவர்கள் தர்க்கம் புரிகின்றனர், பெரிய சண்டைகள் பிடிக்கின்றார்கள் இவ்வாறு தமிழ் மாணவர்கள்; மாத்திரமின்றி முஸ்லிம் மற்றும் சிங்களப் மாணவர்களும் நடந்து கொள்கின்றார்கள், இதுதானா? தற்போதைய கல்வி.

வெலிக்கந்தைப் பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவிகள் கற்பம் அடைந்தருக்கின்றார்கள், இவற்றினைவிட 18 வயது மாணவி  அவருடைய தந்தையால் கற்பமாக்கப்பட்டுள்ளார், எல்லோரும் படித்தவர்கள்தான் பாடசாலைகள் கட்டப்படுகின்றன, ஏனைய வளங்கள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் இதுதானா இப்போதைய கல்வி.

எல்லோரும் கட்டங்கள் தாங்கள், கேற் தாருங்கள், வீதிகள் தாருங்கள், என்றுதான் கேட்கின்றார்கள். ஆனால், கல்வியை சீர் செய்து தருமாறு கேட்பதாக இல்லை. பன்சலையிலும்; சீமெந்து தாருங்கள், ஏனைய வசதிகள் செய்து தாருங்கள் என்று கேட்கின்றார்கள். ஆனால், புத்ததர்மம் பற்றி பேசுகிறார்கள் இல்லை.
 
என்னிடம் அதிக தமிழ் பிள்ளைகள் வேலை தாருங்கள் என்று விண்ணப்பம் தந்துள்ளனர்,  நான் சொல்கின்றேன் நீங்கள் வாக்களித்த அரசியல் வாதிகளிடம் கேட்டகலாம் தானே என்று. இவற்றை விட, கடந்த கால யுத்தத்தில் எமது பிள்ளை இறந்துள்ளது, எமது கணவர் இறந்துள்ளார், எனக் கூறிக்கொண்டு உதவிகள் செய்யுமாறு அதிகளவு தமிழ் மக்கள் என்னிடம் வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் பல ஆறுகள் பாய்ந்துதான் திருகோணமலைக்கும் போக வேண்டும் ஆனால் இப்போது அந்தப் பிரச்சனை இல்லை சீரான வீதி போடப் பட்டுள்ளது. அந்த வீதியால் செல்லும் போதும் கூட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் கூட, என்னதான் இந்த மஹிந்த ராஜபக்ஷ செய்திருக்கின்றார் என கேட்கின்றார்கள். இதுதான் இன்றைய நிலமை.

அப்படியென்றால் இதுவரைக்கும் செய்து கொண்டிருக்கின்ற வைத்தியசாலை, வீதி, வீட்டுத் திட்டங்கள், மற்றும் ஏனைய அபிவிருத்திகளையெல்லம் யார் செய்கின்றார்கள். இந்த அரசாங்கம்தான், வேறு யாருமில்லை.

தற்போது கிழக்கு மாகாணத்தில் 4 அமைச்சர்கள் உள்ளார்கள் அதில் நான் மட்டும் சிங்கள் அமைச்சர். கிழக்கில் அதிகளவு வாழ்கின்றவர்கள் தமிழ் மக்கள்தான் ஆனால், மாகாண சபையில் தமிழ் அமைச்சர் யாருமில்லை ஏன் இந்த நிலமை உருவாக வேண்டும், சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  
 
தமிழ் மக்களுக்கு அதிகம் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். இந்த நிலமைகள் எதிர் காலத்தில் மாறவேண்டும் தமிழ் மக்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். இது நமது நாடு அனைவரும் முன்னேறினால்தான் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு பெறலாம்.

நமது பிள்ளைகளின் கைகளில் பென்தான் இருக்க வேண்டும் மாறாக துப்பாக்கி இருக்கக்கூடாது. கடந்த காலங்களில் யுத்தத்தினால் 70,000 சிங்கள பிள்ளைகள் இறந்துள்ளார்கள். இது எதனால் வந்தது? ஆனால் நான் ஒரு பௌத்த மதம் சார்ந்தவன் எனினும்  தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றித்தான் கடமைபுரிந்து வருகின்றேன். இதுதான் உண்மை. சிங்கள மக்கள் என்னிடம் சொல்கின்றார்கள் நான் அதிகம் தமிழ் மக்களுக்குத்தான் உதவி செய்வதாக.

கடந்த கால வரலாறுகளைத் திரும்பிப் பாருங்கள், ஆனந்தகுமாரசுவாமி. ஆறுமுக நாவலர், போன்றோரின் சரித்திரங்களைகளைப் படியுங்கள், அவர்கள் முன்னேற்றம் அடைந்தது எதனால் இந்த கல்வியினால்தான்.

கடந்த கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி முதலிடம் வட மாகாணம், இரண்டாம் இடம் சப்பிரகமுவ மாகாணம், மூன்றாம் இடத்தை நமது கிழக்கு மாகாணம் பெற்றுள்ளது. இதுபோன்ற முன்னேற்றங்கள் எதிர் காலத்தில் ஏற்பட வேண்டும. என அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X