2025 மே 03, சனிக்கிழமை

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியம்: சந்திரகாந்தன்

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல் 

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியம், அக்கல்வியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் முக்கியமாக அமைகின்றது. அந்த வகையில் எமது முன்னோர்கள் காலத்தில் இருந்து வந்த உணவப்பழகங்க பழக்கங்களைப் பேணி ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்  நேற்று (18) தெரிவித்தார்.

மட்/மகிழூர் சக்தி வித்தியாலயத்தில் அமைக்கப் படவுள்ள புதிய இரண்டு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற கல்வி வலயங்களிலே போட்டித்தன்மை ஏற்பட்டிருக்கின்றது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்னேற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இருந்தலும் மட்டக்களப்பு கல்வி வலயத்தற்கும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் ஒரு போட்டித் தன்மை ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் கிராமப்புற பாடசாலைகளில் பல குறைபாடுகள் நிலவி வந்தன. ஆனால், கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டதன் பிற்பாடு அந்த குறைபாடுகள் பட்டிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனாலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு சேர்த்து ஒழுக்கததையும்  நற்பண்புகளையுடை எதிர்கால சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு ஆசிரிய சமூகமும், பெற்றோரும் அதேபோல் மாணவர்களும் செயற்பட வேண்டும்.

இவ்வாறு செயற்பட்டால் எதிர் காலத்தில் ஓரு சிறந்த சமூகக் கட்டுமானத்தையும் சிறந்த புத்திஜீவிகளையும்  உருவாக்கிக் கொள்ள முடியும்.
 
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியம் அக்கல்வியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் முக்கியமாக அமைகின்றது. அந்த வகையில் எமது முன்னோர்கள் காலத்தில் இருந்து வந்த உணவப்பழகங்க பழக்கங்களைப் பேணி ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

பெற்றோர்கள் மாணவர்களுக்கு அதிகம் தேடிக்கற்கும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தேடிக்கற்கின்ற நிலமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரும் குறையாக இருந்து வருகிறது. 

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்க பெரும்பான்மை இனத்தினைச் சார்ந்தவாராக இருந்தலும் கிழக்கு மாகாணசபைக்குரிய அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பாடுபட்டு வருபவராகவும், தமிழ் மக்களுக்கு அதிகளவு உதவிகளை நல்கி வருபவராகவும் காணப்படுகின்றார் எனவே அவர் இந்த மாகாணத்திற்குக் கிடைத்தது ஒரு சாதகமான விடையமாகும்.

இந்த பாடசாலையில் காணப்படும் ஒன்றுகூடல் மண்டபத்திற்கான தேவையினையும், இக்கிராமத்தில் காணப்படுகின்ற வீதிகளின் புணரமைப்பு உட்பட ஏனைய தோவைகளையும் படிப்படியாக பூர்த்தி செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இவைகள் அனைத்திற்கும் எமது மக்கள் மத்தியில் அரசியல் பலம் ஒன்று மிக முக்கிய தேவையாகவுள்ளது. எனவே கடந்த காலங்களில் எமது மக்கள் மத்தியில் காணப்பட்ட மாற்றுச் சிந்தனைகள் அனைத்தனையும் விட்டுவிட்டு எதிர் காலத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருமித்து செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்பது நீண்டு கொண்டு செல்கின்றது.

அரசாங்கம் எமக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு தருகின்றதில்லையே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்கின்றது அது என்ன ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர் என்று தமிழ் கூட்டமைப்பிடம் கேட்டால் சொல்லமாட்டார்கள்.

ஆனால், அரசாங்கம் சொல்கின்றது நாங்கள் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு கொடுப்போம் அதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரவேண்டும் என்றும் இந்த தெரிவுக்குழு ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சவார்த்தை நடாத்தப் போகின்றோம் என்றும் கூறுகின்றது.

கடந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் காலத்தில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பிரேமதாசாவின் ஆட்சிக்காலம், அதன் பிற்பாடு சந்திரிக்காவின் ஆட்சியில் ஜசூசி அக்காசியின் வருகை, பின்னர் ரணில் விக்கிரம சிங்க எரிக்சொல்கைiமை வரவழைத்தது, தற்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ரமபோசவின் சந்திப்பு போன்ற பல விடையங்கள் இலங்கையில் நடந்தேறி வருகின்றன.
 
இந்த நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்து விடுகின்ற பிழைகள் எதிர் காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இவைகள் அனைத்தனையும் சித்தித்துச், சிந்தித்து தேசிய அரசியலில் கரைந்து போகும் நிலமைதான் கடந்த காலங்களில் இடம்பெற்றன.

எனவே, எமது தமிழ் மக்கள் அவர்களுடைய உட்கட்டுமானங்களையும், ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளையும், மேற்கொள்வதற்கு எதிர் காலத்தில் சிறப்புடனும் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ் மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல்வாதிகளுக்கு கரம் கொடுத்து உயர்த்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X