2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பட்டம் விடும் வைபவம்

Thipaan   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சமூக ஒருமைப் பாட்டு வாரத்தினையொட்டி, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சினால் யு.என்.டி.பி. அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டம் விடும் வைபவம் மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் நேற்று(19) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. மல்காந்தி ஏக்கநாயக்க, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட இராணு இணைப்பதிகாரி பிரிகேடியர் பாலித பெர்னாண்டோ, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க, மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது முதலாவது பட்டத்தை அதிகாரிகள் விட, ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டங்களை விட்டனர்.

இதன் போது பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இவ் வைபவத்தில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மாணவர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X