2025 மே 03, சனிக்கிழமை

பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி வகுப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 21 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி வகுப்பை, பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக  அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

இந்த பயிற்சி வகுப்புக்கு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் குடும்பத் தலைவிகள்  உட்பட ஏனைய பெண்களும் இணைந்துகொள்ள முடியும்.

இந்த வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள் தங்களது பெயர், முகவரி,  தேசிய அடையாள அட்டை இலக்கம்,  தொலைபேசி இலக்கம், கல்வித் தகைமை  ஆகியவற்றைக் கொண்டமைந்த விண்ணப்பப்படிவங்களை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு, சேர்மன் இப்றாகீம் வீதி, காத்தான்குடி 01 எனும் முகவரிக்கு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வகுப்புக்கு குறிப்பிட்டவர்கள் மாத்திரமே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதால், முதலில் வரும் விண்ணப்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X