2025 மே 03, சனிக்கிழமை

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Thipaan   / 2014 ஜூலை 21 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு  ம.தெ.எ. பற்று பிரதேச செயலாளர் எம் கோபாலரெத்தினத்தின் தலைமையில் ஒந்தாச்சிமடத்தில் இன்று (21) நடைபெற்றது.

இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. சத்தியகௌரி,  மற்றும் இந்நிகழ்வு ஒருங்கமைப்பாளர் திருமதி. அருந்ததி சிவரெத்தினம் (முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக சங்கீத பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி ஆர். டெய்சிராணி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே. சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் விழிப்புணர்வு கருத்தரங்குக்கு ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X