2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கடமைகளை பொறுப்பேற்றார்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி.வெதகெதர, தனது கடமைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை (06) பொறுப்பேற்றார்.

இதன் போது  விஷேட பிரார்த்தனையை மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும், காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி) நிகழ்த்தினார்.

இவ்வைபவத்தில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.ஏ.அலிசப்ரி உட்பட  காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள்,பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அஜித் பிரசன்ன பெலியகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடம்மாற்றம் செய்யப்பட்டதையடுத்தே, ஏ.பி.வெதகெதர புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X