2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வடமாகாண கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழு மட்டக்களப்பு விஜயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வடமாகாண கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழு மற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் அனுபவப் பகிர்வு ஒன்றிற்காக வெள்ளிக்கிழமை (08) மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலுள்ள தெல்லிப்பளை, சங்கானை, உடுவில், நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறுவர் கண்காணிப்பு உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் வருகை தந்து, வவுணதீவு பிரதேச செயலக சிறுவர் கண்காணிப்பு உறுப்பினர்களுடன் அனுபவப் பகிர்வில் ஈடுபட்டனர்.

ஏனைய மாவட்டத்திலுள்ள சிறுவர் கண்காணிப்புக் குழுக்களுடனான அனுபவப் பகிர்வு நோக்குடன் சிறுவர் பாதுகாப்பு (சர்வதேசம்) அமைப்பின் அனுசரணையுடன் இந்த விஜயம் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது சிறுவர் கண்காணிப்பு குழுக்களின் செயற்பாடுகள் பற்றி இரு குழுக்களுக்குமிடையே விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் கே. பிரபாகரன், சிறுவர் பாதுகாப்பு (சர்வதேசம்) அமைப்பின் இணைப்பாளர் என். அன்ரூவ் பிரதேச சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தர்கள் மற்றும் வடமாகாண பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு உறுப்பினர்கள் என பலரும் இந்த அனுபவப் பகிர்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X