2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்க வீதி விளக்குகளைப் பெருத்துமாறு மக்கள் கோரிக்கை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்தினுள் வரும் காட்டு யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்க வீதி விளக்குகளைப் பெருத்துமாறு பிரதேச மக்களினால் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக போரதீவுப் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பல கிராமங்களில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளன.
இவற்றுக்கு கிராமங்களிலுள்ள வீதிகளில் மின்சார விளக்குகளைப் பொருத்துவதற்கு நாம் இலங்கை மின்சார சபையுடன் தொடர்பு கொண்டோம் வீதி விளக்குகளுக்காக வேண்டி கட்டணங்களைச் செலுத்துமாறு மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், மின்சார சபைக்கு பணம் செலுத்தி வீதி விளக்குகளை பொருத்துமளவுக்;கு எமது பிரதேச சபையில் நிதி வசதி போதாமலுள்ளது.  எமது பிரதேச சபையின் வருமானமும் போதாதுள்ளது.

எதிர் காலத்தில் விவசாயிகளிடமிருந்து ஏக்கர் வரி, பொதுமக்களிடமிருந்து சோலைவரி, போன்ற வரிகள் அறவீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றை அறவீடு செய்து வரும் நிதியில்தான் வீதி விளக்குகளைப் பொருத்தும், செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். ஆனால், அதுவரையில் எமது பிரதேச சபையினால் வீதி விளக்குகளைப் பொருத்துவது என்பது சாத்தியமில்லை எனவும் போரதீவுப் பற்று பிரதேச சபை செயலாளர் மேலும் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X