2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

அனர்த்த ஒத்திகை நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 
  

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளி கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்த அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நிகழ்வு  நேற்று புதன்கிழமை (13) ஆனைகட்டியவெளி கிராமத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, அக்ரெட், ஒக்ஸ்பாம், சேவ்த சில்றன், கண்டிக்கப் இன்ரநெஷ;னல், போரதீவுப்பற்று பிரதேச செயலகம், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவு என்பவற்றின்; ஒத்துழைப்புடன் இவ்வனர்த்த ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிதியுதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுதாய மட்டத்திலான அனர்த்தக் குறைப்பினை உள்வாங்குவதனூடாக சமுகத்தின் அனர்த்த மீள்திறனைக் கட்டியெழுப்புதல் எனும் திட்டத்தின் கீழ் இந்த அனர்த்த ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ஆனைகட்டியவெளி கிரம சேவகர் நா.சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஆசிய பிராந்தியத்திற்கான அவசர பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் மரி, மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்தர்கள், அக்ரெட், ஒக்ஸ்பாம், சேவ்த சில்றன், கண்டிக்கப் இன்ரநெஷனல், போரதீவுப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவு உறுப்பினர்கள்  பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனைகட்டியவெளி கிராம மக்களினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் அனர்த்தம் ஒன்று ஏற்படும் வேளையில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுதல், தேடுதல்களை எவ்வாறு மேற்கொள்ளுதல், முகாம்களை எவ்வாறு முகாமைத்துவம்; செய்தல், சுகாதர முதலுதவி செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்தல், மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்வது தொடர்பாக இதன்போது ஒத்திகை பார்க்கப்பட்டன.

இதன்போது ஆனைகட்டியவெளி பாடசாலை மாணவர்களினால் வரையப்பட்ட அனர்த விழிப்புணர்வு தொடர்பான சித்திரங்களும் காட்சிப் படுத்தப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X