2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

போரதீவுப்பற்று பிரதேச சபையின் கட்டிட பணிகள் துரிதகதியில்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்   


மட்டக்ளப்பு,  போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் இவ்வருட இறுதிக்குள் திறக்கப்படவுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தெரிவித்தார்.

 புறநெகும திட்டத்தின் கீழ்; இக்கட்டிடம் வெலாவெளி பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இக்கட்டிடத்தின் 90 சதவீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஏனைய வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

போரதீவுப் பற்று பிரதேச சபையானது ஆரம்ப காலத்திலிருந்து பழுகாமத்தில் சிறிய கட்டடமொன்றில் இயங்கி வந்தது. ஆனால் கடந்த 4 வருடகாலமாக வெல்லாவெளியில் தனியார் கட்டிடம் ஒன்றி;லே செயற்பட்டு வருவதாகவும் அதன் காரணமாக தமது சேவைகளை விரிவுபடுத்த முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இவ்வருட இறுதியில் புதிய கட்டிடம் திறக்கப்படும் எனவும் அதன் பின்னர் தமது சேவைகளை விரிபுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X