2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'விசர் நாய்க்கடி இல்லாத இலங்கை' விழிப்புணர்வூட்டல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


விசர் நாய்க்கடி இல்லாத இலங்கை எனும் தொனிப்பொருளின் கீழ், மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவில் தொடர்ச்சியான விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக, மட்டக்களப்பு மாநகர சபையின் கால்நடை பொதுச் சுகாதாரப் பிரிவு  வைத்திய அதிகாரி மல்லிகாதேவி அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் விசர் நாய்க்கடி நோய்கள் பற்றிய விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை (23) திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
விசர் நாய்க்கடி நோயை ஒழிப்பதற்கு மூன்று வழிவகைகள் உண்டு.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களைப் பதிவு செய்ய வேண்டும், விசர் நோய்க்கு எதிரான தடுப்பூசியை நாய்களுக்கு ஏற்றுதல் வேண்டும், தெரு நாய்hட தொல்லையைத் தவிர்ப்பதற்கும் அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குமாக அவற்றுக்கு கருத்தடை ஊசிகளைப் போட வேண்டும் போன்றவை இம்மூன்று வழிமுறைகளாகும்.

மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைவாக இந்த விழிப்புணர்வூட்டல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

மாமாங்கம், வலையிறவு, இருதயபுரம், கல்லடி மற்றும் நாவற்குடா போன்ற பகுதிகளில் தொடர்ந்து விசர் நாய்க்கடி நோய் பற்றிய விழிப்புணர்வூட்டல் வெள்ளிக்கிழமை (22) மற்றும் சனிக்கிழமை (23) ஆகிய தினங்களில் நடைபெற்றது.

சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து நீர் வெறுப்பு நோய் அல்லது விசர் நாய்க்கடி நோய் என்று கூறப்படுகின்ற இந்த நோயை ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு எமக்கு அத்தியாவசியமானது என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குட்பட்ட திமிலைதீவு, வலையிறவு, புதூர், சேற்றுக்குடா, வீச்சுக்கல்முனை ஆகிய ஐந்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த விழிப்புணர்வூட்டல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய விலங்கு நோய் தடுப்பு பிரிவின் பொது சுகாதாரப் பரிசோதகர் பி. ரவிச்சந்திரன் மற்றும் வலையிறவு பிரிவின் பொது சுகாதாரப் பரிசோதகர் வி. ரமேஸ்குமார், பி. முருகதாஸ், திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எம். நவரஞ்சன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ரூபிதா, கணக்காளர் கே. ரஜனி மற்றும் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X