2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கண்ணபுரம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கண்ணபுரம்  கிழக்கு கிராம மக்களுக்கு  போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை பாலையடிவட்டை இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை (25) வழங்கியுள்ளனர். 

231ஆவது இராணுவ படைப்பிரிவின்  பிரிகேடியர் பாலித்த பெர்ணாந்துவின் ஆலோசனைக்கு அமைய குடிநீர் வழங்கப்பட்டது.

கண்ணபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகஸ்தர் பி.சுகதாஸின்; தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மேஜர் அல்விஸ், லெப்டினன் சந்தண, கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கண்ணபுரம் கிழக்கு கிராமத்தைச்; சேர்ந்த 223 குடும்பங்களில் தலா குடும்பத்துக்கு 10 லீற்றர் படி  போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டதாக பாலையடிவட்டை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் சந்தண தெரிவித்தார். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X