2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அழுத்தச் செயற்பாடொன்றை முன்னெடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கத்தினால் 'எமக்கே எமக்கான நாடு பெண்னே பயமின்றி வாழு' எனும் தலைப்பை அடிப்படையாக கொண்டு இலங்கை வாழ் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நோக்குடன் அகில இலங்கை ரீதியில் அழுத்தச் செயற்பாடொன்றினை செப்டெம்பர் மாதத்தினுள் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக போரினால் பாதிக்கப்பட்ட சங்கத்தின் தலைவி திருமதி விசாகா தர்மதாச வியாழக்கிழமை(28) தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக போஸ்டர் கையேடுகளை பகரிந்தளித்தல், மாகாண மட்டத்தில் நிகழ்வுகளை நடத்துதல், கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளை நடாத்துதல், இலத்திரணியல் ஊடகம் மற்றும் வீதி நாடகம் என்பவற்றினூடாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தல், கண்காட்சியொன்றை நடாத்துதல் போன்ற திட்டங்கள் அமுல் படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்..

இதற்கான ஒத்துழைப்பினை போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்திற்கு வழங்குமாறு கேட்டு அதன் தலைவி திருமதி விசாகா தர்மதாச அதன் சகல உறுப்பினர்களையும் எழுத்து மூலம் கேட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X