2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் குடும்பஸ்தர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஹெரோயின் வைத்திருந்தார் என்ற  சந்தேகத்தின் அடிப்படையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணியில் இன்று வெள்ளிக்கிழமை காலை குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புலானாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபரினுடைய தாயின் வீடு சோதனையிட்டது. இதன்போது 200 மில்லிகிராம் கொண்ட ஹெரோயின் பைக்கட்டுக்கள்  கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக கொழும்பில் தேநீர்க்கடை நடத்திவிட்டு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஏறாவூருக்கு வந்து சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X