2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருட்கள் வைத்திருந்த ஐவருக்கு கடூழிய சிறை

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஐந்து பேருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ், புதன்கிழமை கடூழிய சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உட்பட மேலும் மூன்று பேருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் தண்டமும் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இது உடனடியாக அமுலாகும் விதத்தில் தொடர்ச்சியாக 3 மாத கடூழிய சிறைத் தண்டனையும், மீதமுள்ள 21 மாதங்களுக்கான தண்டனை 20 வருடங்களில் ஒத்தி வைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையாக  விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான நபருக்கு 9 ஆயிரம் (ஒன்பதாயிரம்) ரூபாய் தண்டப் பணத்துடன், ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இது உடனடியாக அமுலாகும் விதத்தில் தொடர்ச்சியாக 3 மாத கடூழிய சிறைத் தண்டனையும், மேலும் மீதமுள்ள ஒன்பது மாதத் தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X