2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டுள்ளது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தியாவட்டுவான் பகுதியில் நேற்று (29) மாலை கண்டெடுக்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி ஆற்றில் ஓட்டமாவடி பாலத்தில் இருந்து நூறு மீற்றர் துரத்தில் தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னாலுள்ள ஆற்றில் இருந்து நேற்று மாலை கண்டெடுக்கப்பட சடலம், மாவடிச்சேனையைச் சேர்ந்த மீராசாஹிப் ஹனிபா (வயது 30) என அவர்களது உறவினர்களால் அடையாளங் காணப்பட்டுள்ளது.

காவத்தமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் மாவடிச்சேனை கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான இவர் மன நோயாளி என்றும் நேற்று காலையில் வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகள் இடம் பெற்றதன் பின்னர் இன்று (30) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தில் வழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X