2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குடிநீர் இணைப்பு பெறுவதற்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் வறுமைக் கோட்டுக்கு  கீழுள்ள 50 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவி நேற்று சனிக்கிழமை (30) மாலை வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின்; தனிப்பட்ட நிதியிலிருந்து  இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

இதேவேளை, காத்தான்குடியின் கரையோரத்திலுள்ள 10 பள்ளிவாசல்களுக்கு தலா  பள்ளிவாசலுக்கு 25,000 ரூபாய் படி நிதியுதவி வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் மத்திய குழு அலுவலகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் காத்தான்குடி மத்திய குழுவின் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நசீர் அகமட், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை,  மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றமழான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X