2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சஹன அருண' நிவாரண உதயம் நிகழ்ச்சியில், தமிழ் புறக்கணிப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


நாடளாவிய ரீதியில்,  வாழ்வின் எழுச்சி திட்டத்தின் 'சஹன அருண' 'நிவாரண உதயம்' எனும் திவிநெகும திணைக்களத்தின் நிவாரணக் கடன் திட்டம் இன்று திங்கட்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த அரச நிகழ்வுகளில் அரச நிருவாக மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக திவிநெகும பயனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

'சஹன அருண' 'நிவாரண உதயம்' எனும் விளக்கமளித்து நாடெங்கிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள விளக்கக் கையேடு தனிச் சிங்கள மொழியிலேயே இருந்தது பற்றி திவி நெகும பயனாளிகள் கவலை வெளியிட்டனர்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மொழி மூலம் கருமமாற்றும் சகல பிரதேச செயலகங்கள் மூலமாகவும் தமிழ் மொழி பேசும் திவிநெகும பயனாளிகளுக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தனிச் சிங்களத்தில் அமைந்த கையேடுகளே விநியோகிக்கப்பட்டன.

'அவசரமாக இந்தத் திட்டம் அமுல் படுத்தப்படுவதால் தமிழ் மொழி மூலம் இந்தத் துண்டுப் பிரசுரத்தை வெளியிட கால அவகாசம் இருந்திருக்கவில்லை' என்று ஏறாவூரில் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கலந்து கொண்ட வைபவத்தில் பேசும்போது, வாழ்வின் எழுச்சித் திட்ட மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஏ.எம். அலி அக்பர் குறிப்பிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X