2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சஹன அருண' கடன் வழங்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வடிவேல் சக்திவேல் 

'சஹன அருண' கடன் வழங்கும் புதிய வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்துக்கு அமைய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 43 பயனாளிகளுக்கு 15 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செலாளர் எம்.எம்.நௌபர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  கலந்துகொண்டு சஹன அருண திட்டத்தில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு பணத்தை வழங்கி வைத்தார்.

இதேவேளை, ' சஹன அருண' கடன் வழங்கும் புதிய வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்துக்கு அமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 51 பயனாளிகளுக்கு 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதோடு, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் சேகரிக்கும் கொள்கலன்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கோறளைப்பற்று மத்தி வாழ்வின் எழுச்சி திணைக்கள மகா சங்க கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சஹன அருண பயனாளிகளுக்கு கடன் தொகையையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீர் சேகரிக்கும் கொள்கலன்களையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை, 'சஹன அருண' கடன் வழங்கும் புதிய வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்துக்கு அமைய கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 41 பயனாளிகளுக்கு இருபது இலட்சத்து ஐம்பத்தையாயிரம் ரூபாய் பணம் கோறளைப்பற்று வாழ்வின் எழுச்சி திணைக்கள வங்கியினால் வழங்கப்பட்டது.

கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் தேவகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான சஹன அருண பயனாளிகளுக்கு பணத்தினை வழங்கி வைத்தார்.

இதேவேளை, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் சஹன அருண கடன் திட்டத்தின் கீழ் மட்டு.மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுட்குட்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (01) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் கொக்கட்டிச்சோலை சமூதாய அடிப்படை வங்கியில் இடம்பெற்றது.

இதன்போது மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட 133 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டதுடன், 07 பேருக்கு நுகர்வுக்கடனும் வழங்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X