2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சிப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உலருணவு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட 4,500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நிதியை  அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கியுள்ளது.  இந்த நிலையில், தலா  குடும்பத்துக்கு  மாதம் ஒன்றுக்கு  தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
 
உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு   தகுதியான குடும்பங்களின் விபரங்கள் கிராம உத்தியோகஸ்தர்களினால் அந்தந்த பிரதேச செயலாளர்களின் சிபாரிசுடன் பெறப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட  247 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 71,479 குடும்பங்களைச் சேர்ந்த 252,673 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X