2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மது ஒழிப்புக்கான பேரணி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று ஆறுமுகத்தான் குடியிருப்பில் மது ஒழிப்புக்கான பேரணி புதன்கிழமை (3) நடைபெற்றது.

 ஆறுமுகத்தான் குடியிருப்பு - 01 கிராமத்தில் உள்ள 'பெண்களின் செல்வமும் செல்வாக்கும்' என்ற கருப்பொருளில் இயங்கிவரும் குழுவினால் கிராம மட்ட செயற்பாடாக மதுபாவனையை தவிர்ப்பதற்காக வீதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

இதன்போது, இந்தக் கிராமப் பெண்கள் மதுவை ஒழிப்பதற்கான சுலோகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை தாங்கியவாறு தங்களின் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்தப் பேரணியில் கிராம உத்தியோகஸ்தர் எஸ்.சயயொளிபவன், சமுர்த்தி வாழ்வாதார உத்தியோகஸ்தர் எம்.திருமால், வை.எம்.சி.ஏ. உத்தியோகஸ்தர்களான ம.பிரசாந்தினி, ஜே.சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் அனுசரணையுடனும் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. இன் அமுலாக்கத்தில், இலங்கையில் நலிவுற்ற பெண்களை வலுவூ10ட்டும் திட்டத்தின் கீழ் 'மது ஒழிப்பு' என்ற கருப்பொருளில் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் செயற்றிட்டமொன்று  நடைமுறைப்படுத்தப்படுகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X